AusTamilNews

Home / RIP Notices

ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி

(- to 16/04/2020)

கொரோனா தொற்றினால் கனடாவில்

வல்வெட்டித்துறை ஜவர்ஹர்லால்நேரு ராஜேஸ்வரி தம்பதிகள் மரணம்

நேரு ஜயா என அனவராலும் அழைக்கப்பட்ட ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள் செவ்வாய் கிழமை(14-04-2020) கொரோனாத் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் மரணமானார். இவரது துனைவியார் ராஜேஸ்வரி புதன் கிழமை (15-4-2020) மரணமானார்.

இவர்கள் இருவரும் ரொறன்ரோ ஸகாபறோ பகுதியில் அமைந்துள்ள வயோதிபர் நீண்டகால பராமரப்பு நிலையத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கொரோனாத் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்னர்

ஜவர்ஹர்லால்நேரு அவர்கள் திரு குமாரசாமி அன்னலெட்சுமி தம்பதிகளின் புதல்வராவார் இவர் மோதிலால்நேரு, பாலச் சந்திரன், நெப்போலியன், (சகோதரிகளின் பெயர் விபரம் கிடைக்கப் பெறவில்லை) ஆகியோரின் சகோதரராவார். கீதாஞ்சலி, சுபாஜினி ஆகிய இரு பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

வல்வெட்டித்துறையில் 1932ம்ஆண்டு பிறந்த இவர் சிதம்பபரக் கல்லூரியல் கல்வி கற்று இலங்கை தபால் திணைக் களத்தில் அதிபராகப் பணி புரிந்தவர்.

1980 களின் இறுதியில், கனடா வந்த நேரு அவர்கள கல்விகற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதற்கிணங்க தனது 67ம் வயதில் ரொறன்ரோ யோக் பல்கலைக் கழகத்தில் BA சிறப்பப் பட்டத்தை படித்து முடித்தார். அதன் பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பிறன்ச்(French) மொழியையும் கற்றுத் தேறியவராவார்.

1990ம் ஆண்டு வல்வை நலன்புரிச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைவராக தெரிவு செய்ப்பட்டு தனது சமூக சேவையை ஆரம்பித்த அவர் உலகத்தமிழர் இயக்கத்தில் மொழி பெயர்பாளராகப் பணியாற்றினார், என்பதுடன் உலகத்தமிழர் பத்திரிகையில் பல அரசியல் கட்டுரகளை எழுதியதுடன் கனடியச் செய்திகளின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் 'கனடா உலகத்தமிழர்' பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றிய நேரு ஜயா அவர்கள் வயது முதிர்வின் கரணமாக தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இறக்கும் வரை தமிழ் தேசியத்தை நேசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'கனடா உலகத்தமிழர்' பத்திரிகை நேரு ஜயா அவர்களுக்கு தனது ஆழ்ந்த அஞ்சலியையும் இறுதி வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது